தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இன்றுமுதல் திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு கூடங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
ஒற்றை திரையரங்குகள் முதல் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் படத்தைத் தயாரித்து ரிலீஸுக்குத் தயாராக உள்ள தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத காரணத்தால் தங்களுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க ஓடிடியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், திரிஷா நடித்துள்ள ராங்கி, நயன்தாராவின் நெற்றிக்கண் ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் உள்ளன.