ETV Bharat / city

பாமக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு! - சென்னையில் பாமக நிர்வாகியின் காரை உடைத்த பண்

சென்னையில் தொழிலதிபரும், பாமக நிர்வாகியுமான சாம் பாலின் விலையுயர்ந்த கார் கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காவலர்கள் கைது செய்தனர்.

பாமக நிர்வாகியின் காரை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

author img

By

Published : Apr 5, 2022, 3:53 PM IST

சென்னை: ஆயிரம் விளக்குப் பகுதியில் ரட்லண்ட் கேட் என்ற இடத்தில் பாமக நிர்வாகியும் தொழிலதிபருமான சாம் பாலின் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டின் கீழே சாம் பாலுக்குச் சொந்தமான விலை உயர்ந்த இரண்டு காரை, நேற்றிரவு(ஏப். 04) பெண் ஒருவர் அடித்து உடைத்துள்ளார்.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து சாம் பாலின் மேலாளர் ஷப்னம் பானு, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் சாம் பாலிடம் விசாரணை நடத்தியபோது, காரை தாக்கிய பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப்புகாரின் அடிப்படையில் கார் கண்ணாடியை உடைத்த நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். காவலர்கள் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, கைது செய்யப்பட்ட பிரியங்கா ஐந்து ஆண்டிற்கு முன்பு கீழ்ப்பாக்கத்தில் உள்ள டோனி அண்ட் கய் (tony and guy) எனப்படும் ஸ்பாவில் மேலாளராகப் பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.

பிரியங்கா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஆட்டோவில் வந்து சாம் பால் கார் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு மனநல ஆரோக்கியச்சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் நீதிமன்றத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மக்கள் கண்ணீருக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும்... ஓ. பன்னீர்செல்வம்...'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.