ETV Bharat / city

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை 5 லட்சமாக உயர்வு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை 5 லட்சமாக உயர்வு

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசு தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் விருது
அம்பேத்கர் விருது
author img

By

Published : May 7, 2022, 6:15 AM IST

சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அயராது உழைத்த சமத்துவம் மற்றும் சமூக நீதியின் முன்னோடியான அண்ணல் அம்பேத்கரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டிற்கும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் தொண்டாற்றிய ஒருவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது 1995 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று, முதலமைச்சர் டாக்டர் அம்பேத்கர் விருதை வழங்கி வருகிறார். 2021 ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முன்னாள் நீதியரசர் 'சந்துரு'-விற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் இருந்து டாக்டர் அம்பேத்கர் விருது பரிசு தொகை ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்று00ம் பழங்குடியினர் நலத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசியலமைப்பு தினம்! அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய மம்தா பானர்ஜி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.