சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதற்குச் சமமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 92 விழுக்காடு நபர்கள் குணமடைந்து உள்ளனர். அதேபோல் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்களின் விழுக்காடு 6ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 560 பேர், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 714 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 3 ஆயிரத்து 13 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை மண்டல வாரியாக சிகிச்சைப்பெற்று வருபவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
கோடம்பாக்கம் - 1140
அண்ணா நகர் - 993
ராயபுரம் - 828
தேனாம்பேட்டை - 785
தண்டையார்பேட்டை - 622
திரு.வி.க. நகர் - 863
அடையாறு - 799
வளசரவாக்கம் - 739
அம்பத்தூர் - 768
திருவொற்றியூர் - 243
மாதவரம் - 353
ஆலந்தூர் - 641
சோழிங்கநல்லூர் - 343
பெருங்குடி - 475
மணலி -116