கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை இன்றுமுதல் திறக்கப்படும் என அறிவித்திருந்தது.
மேலும் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அருங்காட்சியம் இன்று திறக்கப்படவில்லை.
இது குறித்து அலுவலர்களிடம் கேட்டபோது, தற்போது கரோனா தொற்று அதிகமாக உள்ளதால், தமிழ்நாடு அரசு அருங்காட்சியம் திறக்க அனுமதி வழங்கவில்லை என்றும் இது குறித்து மத்திய அரசுக்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு வரும்போது அருங்காட்சியம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.