ETV Bharat / city

'சிஎம்டிஏவை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்குள்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் 60 நாள்களில் அனுமதி' - Minister muthusamy

சிஎம்டிஏவை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்குள்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் 60 நாள்களில் அனுமதி தரப்படும் என அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார்.

minister muthusamy
minister muthusamy
author img

By

Published : Jun 25, 2021, 6:32 PM IST

சென்னை: எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதித் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அத்துறை அமைச்சர் முத்துசாமி, துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வான உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “சிஎம்டிஏ-விற்குத் தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. காலியிடங்களை நிரப்புவதன் மூலம் சிஎம்டிஏ ஊழியர்களின் பணிச்சுமை குறையும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கேசுகையில், “சிஎம்டிஏ-வை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்குள்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் 60 நாள்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” எனக் கூறினார்.

மேலும், கோயம்பேடு காய்கறி சந்தையைப் புதுப்பிக்கும் அவசியம் உள்ளது என்றும் மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது, குப்பைகளை அகற்றுவதில் தனி கவனம் செலுத்துவோம். கோயம்பேடு காய்கறி சந்தையில் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.

முதலமைச்சரின் நீண்ட கால திட்டம் பற்றி இந்தக் கூட்டத்தில் பேசி இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் எங்களை சந்திக்கும் போதெல்லாம் மக்களின் குறைகளை எவ்வாறு கேட்டு தெரிந்துள்ளீர்கள் என்றுதான் கேட்கிறார் எனவும்
மக்களிடம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் எனவும் பொதுமக்களுக்கு உள்ள பிரச்சினைகள், கால தாமதம் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.