ETV Bharat / city

போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம்: மாணவி போலி அழைப்புக்கடிதமும் கொண்டு வந்தது அம்பலம் - போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம்

போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம்: மாணவி போலி அழைப்புக்கடிதமும் கொண்டு வந்தது அம்பலம்

author img

By

Published : Dec 14, 2020, 12:32 PM IST

Updated : Dec 14, 2020, 1:40 PM IST

12:24 December 14

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட விவகாரத்தில் போலி அழைப்புக்கடிதமும் மாணவி வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தீக்‌ஷா(18) என்பவர் கலந்து கொண்டு நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்த சான்றிதழை வழங்கியுள்ளார்.
மாணவி தீக்‌ஷா அளித்த சான்றிதழ் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அதிகாரிகள் விசாரிக்கும்போது போலியான சான்றிதழ் என தெரியவந்தது.மேலும் நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து உள்ளதாகவும், ஹிரித்திகா என்ற மாணவி எடுத்த 610 மதிப்பெண்களின் பட்டியலை தீக்‌ஷா மாற்றியும், தனது புகைப்படத்தை பொருத்தியும் போலியாக சான்றிதழ் தயாரித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹிரித்திகாவின் சீரியல் எண்ணை எடுத்துவிட்டு தீக்‌ஷா சீரியல் எண்ணைப் போட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கடந்த மருத்துவக் கல்வி குழும இயக்குநர் செல்வராஜன் கடந்த 7ஆம் தேதி பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ், பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்

இந்த நிலையில் மாணவி அளித்த மதிப்பெண் சான்றிதழின் உண்மை நிலையை அறிய தடயவியல் துறைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் கலந்தாய்வு அனுமதி கடிதத்தையும் மாணவி தீக்‌ஷா போலியாகத் தயாரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவியின் நீட் மதிப்பெண் சான்றிதழ், தரவரிசை சான்றிதழ், விண்ணப்பம், அனுமதிச் சான்றிதழ் உள்ளிட்ட 10 விதமான ஆவண ஆதாரங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் காவல் துறையினரிடம் சமர்ப்பித்துள்ளனர். மேலும் மாணவிக்குப் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பரமக்குடியைச் சேர்ந்த கம்பியூட்டர் சென்டர் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த மோசடியானது டி.என்.பி.எஸ்.சி தேர்வின் போது நடைபெற்ற மோசடியைப் போன்று சங்கிலித் தொடராக நடந்துள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைக்கும் முதலமைச்சர்!

Last Updated : Dec 14, 2020, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.