இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும், அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களன திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கன மழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.
மணிக்கு 65இல் இருந்து 75 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நவம்பர் 26ஆம் தேதி மணிக்கு 55 முதல் 65 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கூரை வீடுகள் மற்றும் குடிசைகள், மேற்கூரைகள் பாதிப்புக்குள்ளாகும். மின் இணைப்புகள் மற்றும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படலாம். மண் சாலைகள், தார் சாலைகள் வெள்ள நீரால் பாதிக்கப்படும். மரங்கள் வேரோடு சாயும் நிலை ஏற்படலாம். வாழை, பப்பாளி மரங்கள், பயிர் வகைகள் பாதிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.