ETV Bharat / city

நீட் மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர்

author img

By

Published : Feb 3, 2022, 6:00 PM IST

Updated : Feb 3, 2022, 6:30 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

The Governor of Tamil Nadu sent the NEET Bill back to the Speaker

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த பிறகு, இந்த மசோதாவுக்கான அடிப்படை மற்றும் நீட் தேர்வுக்கு முந்தைய மருத்துவ சேர்க்கைக்கான சமூக நீதியின் நிலையை ஆய்வு செய்ததில், ஏழைப் பின்னணியில் உள்ள மாணவர்களின் நலன்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் ஏழையாக உள்ள மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கருத்து உள்ளது.

ஆனால், வேலூர் கிறிஸ்தவக்கல்லூரியும், யூனியன் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பும் இணைந்து, 2020ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு, ஏழை மாணவர்களின் பொருளாதாரச் சுரண்டலை தடுக்கிறது எனவும்; சமூக நீதியை நீட் தேர்வு ஆதரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 01, 2022அன்று, விரிவான காரணங்களைத் தெரிவித்து, அவையின் மறுபரிசீலனைக்காகத் திருப்பி அனுப்பியுள்ளார்’ என ஆளுநரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீட் விலக்கு மசோதாவிற்கு தற்சமயம் வாய்ப்பில்லை என ஆளுநர் தரப்பு தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர முயற்சியுங்கள் - கோரிக்கை வைத்த ஆந்திர மாணவருக்கு செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Feb 3, 2022, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.