சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பிள்ளையார் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான எக்ஸ்போர்ட் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த கம்பெனியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை மட்டுமே திறக்கலாம் என்று ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி எக்ஸ்போர்ட் கம்பெனி இயங்கி வருகிறது என்று அனகாபுத்தூர் நகராட்சிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அனகாபுத்தூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தது தெரியவந்ததையடுத்து கம்பெனிக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க:
தடையை மீறி செயல்பட்ட வங்கி - அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்