நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில், திருமுருகன் திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு வழிபட்ட பின் பேசிய சீமான், “நம்முடைய இறை எது? நம்முடைய மெய்யியல் கோட்பாடு எது? என்று தெரியாது தடம் புரண்டுபோன தமிழ்ச்சமூகம், இன்று மீண்டெழத் தொடங்கியிருக்கிறது. தமிழர் சமயம் எது? தமிழர் இறை எது? என்று இளைய தலைமுறை தேடிப்படிக்க ஆரம்பித்துள்ளது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியவை தமிழிலிருந்து திரிந்த மொழிகள்தான். உலக மொழிகளின் தாய் தமிழ்மொழிதான். திராவிடம் என்பதை அரசியல் கோட்பாடாக இவர்கள் ஒருபோதும் சொல்லவில்லை. இனமாகத்தான் சொல்லி வருகிறார்கள். நாங்கள்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியத்திற்கு எதிராகச் சண்டையிட்டுள்ளோம். இது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் நிலம். திராவிடமென்றால், அதன் மொழி என்ன? அதன் அடையாளக்கூறு என்ன?
பணமதிப்பிழப்பை முதலில் வரவேற்றுவிட்டு பின்னர் எல்லோரும் எதிர்க்க தொடங்கியதும் எதிர்த்தது போன்று அரசியல் நிர்பந்தத்தால் நாங்கள் இந்துக்கள், நாங்கள் இந்துக்களுக்கு இதை செய்தோம், அதை செய்தோம் என்று கூக்குரலிட்டு வருகின்றனர். கேட்டால் எங்களை பாஜகவின் 'பி டீம்" என்பார்கள். உண்மையில் அவர்கள் தான் ’மெயின் டீம்’. தற்போது முழு பாஜகவாக திமுக மாறி நிற்கிறது. வேறு வழியின்றி இந்த கொடுமையெல்லாம் சகித்துக்கொண்டு போகவேண்டியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: அனைத்து சமுதாய மக்களுக்கான தலைவரை உருவாக்குவேன் - சூளுரைத்த தமிழ்நாடு முன்னாள் த.செ.!