சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து முதலமைச்சர் பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரு அவதூறு வழக்குகளை தொடர்ந்தது.
அந்த வழக்குகள் முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஏப்ரல் 16ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2% கட்சி என்ற நிலையை மாற்றுமா பாஜக?