ETV Bharat / city

'கரோனாவை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

"கரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'கரோனாவை முழுமையாக ஒழித்து விட்டோம் என்று சொல்ல முடியாது'

author img

By

Published : Jul 4, 2021, 11:55 AM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கரோனா விழிப்புணர்வு வீடியோவில், "கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக் கடைபிடித்த நாட்டு மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களை தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மருத்துவ துறையைச் சார்ந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட தொற்றுப் பாதிப்பானது, இப்போது நான்காயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது.

நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். கரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

கரோனாவை முழுமையாக ஒழித்து விட்டோம் என்று சொல்ல முடியாது

கரோனாவை வெல்வதற்குத் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும், கேடயமும் ஆகும்.

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசிப் போட்டு முடிக்கவில்லை. ஒன்றிய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும் முழுமையாக நமக்கு வழங்கவில்லை" என்று முதலமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: சிறந்த பொருளாதார வல்லுநர் குழு அமைத்த முதலமைச்சர் - கனிமொழி எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.