சென்னை: திருக்குறள் நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி, அரசுத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள், 1330 திருக்குறளை ஒப்புவித்து சாதனைப் படைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கடலாடித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், வி.பூதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சுசான்னா, இல்டா ஆகியோரின் குழந்தைகள் ஆபிராம், அருணிஷ். இவர்கள் இருவரும் 1330 திருக்குறளை பார்க்காமல் ஒப்புவித்து சாதனைப் படைத்துள்ளனர்.
1330 குறள்கள்
இவர்கள் கண்டமங்கலம் ஒன்றியம், நவமால் காப்பேரில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு படித்துவரும் சிறுவன் ஆ. ஆபிராம் ஜோஸ் 1330 திருக்குறள்களை,
- 33 நிமிடம் 08 விநாடியிலும்,
இரண்டாம் வகுப்பு படித்துவரும் ஆ. ஆருணிஷ் ஷேண்டாே
- 25 நிமிடம் 47 விநாடியிலும் 1330 குறள்களையும் மனப்பாடமாக ஒப்புவித்தனர்.
மேலும், திருக்குறள் நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 'ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் தயக்கம் காட்டவில்லை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்'