ETV Bharat / city

நடப்புக் கூட்டத் தொடரிலேயே 'நீட்'டுக்கு எதிரான சட்ட முன்வடிவு - ஸ்டாலின் - ஸ்டாலின்

நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Aug 18, 2021, 2:07 PM IST

Updated : Aug 18, 2021, 3:41 PM IST

சென்னை: திருத்தப்பட்ட நிதி மற்றும் வேளாண் அறிக்கை மீதான பொது விவாதம் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி இன்று (ஆகஸ்ட் 18) மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியதும் கொடநாடு விவகாரத்தில் பொய் வழக்குப் போடுவதாக திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சின்போது நீட் தேர்வுக்கான ஒரு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும், எனவே அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட்டுக்குச் சட்ட முன்வடிவு

இதற்குப் பதில் அளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நீட் தேர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடுகளையெல்லாம் மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்; அதில் எந்த மாற்றமும் கிடையாது.

ஸ்டாலின் பேச்சு
ஸ்டாலின் பேச்சு

அந்த அடிப்படையிலேதான் தேர்தல் நேரத்தில் நாங்கள் உறுதிமொழி தந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டுக்கு விலக்குப் பெறுவதுதான் நமது லட்சியமாக இருக்கும், அது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதிமொழி அளித்திருக்கிறோம்.

அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடனேயே, 'இதுபற்றி அலசி ஆராய்ந்து ஒரு ஆய்வு அறிக்கையை பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு நீங்கள் வழங்கிட வேண்டும்' என்று சொல்லி ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களும் அந்தப் பணியை நிறைவேற்றி அந்த அறிக்கையைத் தந்திருக்கிறார்கள்.

அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்

எனவே அந்த அறிக்கை சட்டரீதியாகத் தற்போது பரிசீலிக்கப்பட்டு இந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என உறுதிபடக் கூறினார். தேர்தல் பரப்புரையின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே முதலில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஸ்டாலின் கூறியிருந்தார்.

நடப்புக் கூட்டத்தொடரிலேயே 'நீட்'டுக்கு எதிரான சட்ட முடிவடிவு
நடப்புக் கூட்டத்தொடரிலேயே 'நீட்'டுக்கு எதிரான சட்ட முன்வடிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்தவுடன் நீட் தேர்வு ரத்து குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவியது. நீட் தேர்வுக்குத் தயாராகலாமா, வேண்டாமா என்று மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

நீட் தேர்வு தேதி அறிவிப்பு - தமிழ்நாடு மாணவர்களின் நிலை என்ன?

இதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே ஸ்டாலின்! இப்போ என்னாச்சு... மாணவர்களை ஏன் குழப்புகிறீர்கள் என்று சரமாரியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்துவந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நீட்டுக்கு நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவ்வாறு சட்ட முன்முடிவு கொண்டுவந்தால் அதனை நடைமுறைப்படுத்துவது எந்தளவு சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: NEETஇல் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு!

Last Updated : Aug 18, 2021, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.