ETV Bharat / city

இன்று தொடங்குகிறது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை வர ஆவலுடன் காத்திருப்பதாக மோடி ட்வீட் - மோடி ட்விட்டரில் ஆவல்

சென்னையில் இன்று(ஜூலை 26) செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோலகலமாக தொடங்குகிறது 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா

author img

By

Published : Jul 28, 2022, 11:21 AM IST

சென்னை: உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் மாமல்லபுரத்தில் விளையாட்டு ஏற்பாடுகளுக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் முதன் முறையாக நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்கள் நேரடியாக காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனை செஸ்பேஸ் இந்தியா என்ற யூட்யூப் சேனலில் காணலாம்.

187 வெவ்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஜூலை 29 அன்று தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. சென்னை கிழற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மகாபலிபுரம் ரிசார்ட் மற்றும் கன்வென்சன் சென்டரில் போட்டிகள் நடைபெறும்.

எந்த பக்கம் திரும்பினாலும் சர்வதேச செஸ் போட்டி குறித்த விளம்பர பதாகைகளும், சுவர் ஓவியங்களும், காணப்படுகிறது. துறை வாரியாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன்படி, பொதுப்பணி துறையின் மூலமாக ரூபாய் 53 கோடி செலவீட்டில் OMR மற்றும் ECR சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

போட்டி நடைபெறும் பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியை மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • I am looking forward to being in Chennai for the inauguration of the 44th Chess Olympiad at 6 PM tomorrow evening. This is a special tournament and it is our honour that it is being held in India, that too in Tamil Nadu, which has a glorious association with chess.

    — Narendra Modi (@narendramodi) July 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மோடி ஆவல்: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி இன்று(ஜூலை 28) சென்னை வர உள்ளார். மோடியின் பாதுகாப்பிற்காக 20 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து மோடி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘ 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பான போட்டியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் வீரர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.