உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் மருத்துவம் பலனின்றி இன்று (பிப். 26) காலமானார். 89 வயதான தா. பாண்டியன் சிறுநீரகப் பிரச்சினையால் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அவர் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். தற்போது அவரது உடல் அண்ணா நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இதையடுத்து உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இரவு 7 மணியளவில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.