ETV Bharat / city

பூங்கா பராமரிப்பில் குறைபாடு, தொய்வு என்றால் ஒப்பந்தம் ரத்து - மாநகராட்சி எச்சரிக்கை - Park maintenance in Chennai

மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பு பணிகளில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது

Chennai corporation
Chennai corporation
author img

By

Published : Jul 27, 2021, 6:03 AM IST

சென்னை மாநகராட்சி சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் கோடைகாலங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறையும் குளிர்காலம் மற்றும் மழை காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் புல்வெளிகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.

ஏழு நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியான அளவில் வெட்டி பராமரிக்க வேண்டும். செடிகளின் வார்ச்சியை பொறுத்து தேவையான பொழுது வெட்டி பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தகுதியுடைய பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் பணியில் நாள்தோறும் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு இருக்க வேண்டும்.

பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சி படுத்தி இருக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் பராமரிப்பு பணிகளில் தொடர்ந்து குறைபாடு, தொய்வு கண்டறியப்பட்டால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

குடியிருப்பு நலச்சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து மண்டல அலுவலகம் அல்லது வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் அல்லது தலைமையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் குறித்து தெரிவிக்கனாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.