சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மதுபான கிடங்கு இயங்கிவருகிறது. இங்கு சென்னையின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளின் 2022-க்கான ஏல டெண்டர் இன்று (டிசம்பர் 31) அம்பத்தூரிலுள்ள மதுபான கிடங்கில் நடைபெறவிருந்தது.
இதில் திடீரென எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி ரத்துசெய்யப்பட்டதால் அந்த இடத்தில் மதுபானம் உரிமையாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்திற்குப் பிறகு பார் (BAR) உரிமையாளர் சங்கத்தின் சார்பாக டாஸ்மாக் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கடைகளுக்கான விண்ணப்பம் சரிவர வராத காரணத்தினால் இன்று நடைபெறவிருந்த பார்கள் டெண்டர் ரத்துசெய்யப்பட்டதாக டாஸ்மாக் மேலாளர் உத்தரவின் பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் கிடங்கு முன் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தனியார் நூற்பாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்