ETV Bharat / city

மயக்கமடைந்த மூதாட்டி: டாக்டராக மாறிய ஆளுநர் அடடே! - மூதாட்டிக்கு சிகிச்சை அளித்த தமிழிசை

சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பு மயக்கமடைந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து அனுப்பிவைத்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை.

tamilisai soundarrajan treats an old lady
முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்
author img

By

Published : Jan 14, 2022, 4:22 PM IST

சென்னை: சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தனது வீட்டில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காகத் தயாராக இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி ஒருவர் திடீரென மயக்கமடைந்து சாலையில் விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த தமிழிசை உடனடியாக ஓடிச்சென்று மூதாட்டியை மீட்டு, அவரைப் பரிசோதித்து முதலுதவி அளித்துள்ளார்.

முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வரவைத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

பின்னர், தனியார் மருத்துவமனைக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரிய சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சராக முதல் பொங்கல்: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.