இந்தியாவில் வழக்கமாக ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி பிசிசிஐ முடிவு செய்தது.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தமாதம் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதையடுத்து சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உட்பட அனைத்து சென்னை வீரர்களும் கடந்த சில நாள்களாகவே பிரபல தனியார் ஹோட்டலில் தங்கி, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை அணி வீரர்களுக்கு கரோனா மருத்துவ பரிசோதனைகள் கொள்ளப்பட்டன. அதில் சிஎஸ்கே கேப்டன் தோனி உட்பட சென்னை வீரர்கள் யாருக்கும் கரோனா இல்லை என்று தெரியவந்தது.
இந்நிலையில், இன்று 21ஆம் தேதி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: ”ஓய்வு என்ற வார்த்தையே உங்களுக்கு இல்லை!” - ரெய்னாவுக்கு பிரதமர் கடிதம்!