தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு பிறகு முதல்முறையாக மழலையர் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாகப் பள்ளிக்கு மாணவர்கள் இன்று (பிப்ரவரி 22) வருகைதந்தனர்.
அதன்படி பெருங்களத்தூர் பீர்க்கன்கரணையில் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்களை வரவேற்கும்விதமாக பள்ளியின் வாயில் டெடி, டாக் வேடமணிந்து மழலையர் குழந்தைகளைப் பள்ளியின் வாயிலேயே வரவேற்றனர்.
அதன்பிறகு பள்ளியின் மூத்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மலர்த்தூவி, பலூன் கொடுத்து வரவேற்றனர்.
முதல்முதலாகப் பள்ளிக்கு வரும் மழலையர்கள் சில அழத் தொடங்கினர். அவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள்போல் தூக்கி சமாதானம் செய்தனர்.
இதையும் படிங்க: மைக்கேல்பட்டியில் சிபிஐ: மாணவி லாவண்யா மரணம் குறித்து விசாரணை