ETV Bharat / city

'திமுக தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்றிடுக'... ஆசிரியர்களின் போராட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதி 311இல் கூறியது போல் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் நினைவூட்டல் போராட்டம் நடைபெற்றது.

திமுக தேர்தல் வாக்குறுதி
திமுக தேர்தல் வாக்குறுதி
author img

By

Published : Sep 11, 2022, 5:20 PM IST

சென்னை: கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதி பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்தது. குறிப்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்து இருந்தது. இதனை வலியுறுத்தி ஏற்கெனவே ஆசிரியர் அரசு ஊழியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாழ்வாதார மாநாட்டை நடத்தியது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமை சரியான பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இடைநிலைப் பதிவு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் திமுகவின் தேர்தல் அறிக்கை 311 நிறைவேற்றக்கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற வலியுறுத்தியும் நினைவூட்டல் போராட்டம் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலைப்பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், ”தமிழ்நாட்டின் 2009 ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகள் காலமாக ஒரே பதவி, ஒரே கல்வித்தகுதி, ஒரே பணியை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மாநிலத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியருக்கு இணையான சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படவில்லை.

2009 ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 8,370 அடிப்படை ஊதியமாகவும், 2009 ஜூன் ஒன்றாம் தேதி பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 500 அடிப்படை ஊதியம் என ஆறாவது ஊதியக்குழுவில் ஒரு பிரிவினருக்கு இரு வேறு ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம். காலவரையற்ற சாகும் வரை போராட்டத்தை 2018இல் மிகக் கடுமையாக நடத்திய பொழுது அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் இரண்டு முறை நேரில் வந்து எங்களை சந்தித்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஆதரவு வழங்கினார்.

'திமுக தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்றிடுக'... ஆசிரியர்களின் போராட்டம்

மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் தேர்தல் வாக்குறுதி 311 என்ற தலைப்பில் சம வேலைக்கு சம ஊதியம் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. வயது மூப்பின் காரணமாக பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். எனவே, எங்களின் ஒற்றைக்கோரிக்கையை மாநிலத்தில் உள்ள பிற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் சமமான ஊதியம் வழங்க வேண்டும்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை நாங்கள் கேட்கவில்லை. ஒற்றைக் கோரிக்கையினை விரைந்து நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும். மேலும் அரசின் நிதிநிலை சரியில்லை என முதலமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும், தங்களுக்கு அளிக்க வேண்டிய தொகை மிகவும் குறைவாகவே இருக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: “சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.