ETV Bharat / city

சென்னையில் அதிர்ச்சி.. யூகேஜி சிறுவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்!

சென்னை வியாசர்பாடியில் யூகேஜி படிக்கும் சிறுவன் சேட்டை செய்ததால், பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அச்சிறுவனின் பெற்றோர் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

யுகேஜி படிக்கும் சிறுவன் சேட்டை செய்ததால்  பிரம்பால் அடித்த ஆசிரியர்

author img

By

Published : Jul 4, 2022, 12:35 PM IST

சென்னை: வியாசர்பாடி காமராஜர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் மித்ரன் அஜய்(5). பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மித்ரன் அஜய் பள்ளியிலிருந்தபோது அங்கு பணியாற்றியவரும் ஆசிரியை ஜனனி என்பவர் பிரம்பால் மித்ரன் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்குச்சென்ற மித்ரனின் தலையில் வீங்கிருப்பதைக் கண்ட பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் சிறுவன் கால் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததால் சிறுவனின் பெற்றோர் பள்ளி சென்று விசாரித்தபோது சிறுவன் சேட்டை செய்ததால், ஆசிரியர் அடித்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர் செம்பியம் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூகேஜி படிக்கும் சிறுவன் சேட்டை செய்ததால் ஆசிரியர் அடித்ததாக கூறப்படும் இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கல்வித்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: CCTV:கருத்துவேறுபாடால் பிரிந்த தம்பதியினர்; பட்டப்பகலில் சொந்த மகளை கும்பலாக வந்து கடத்திய தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.