சென்னை: 75ஆவது விடுதலை நாள் விழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 70 நகரங்களில் 75 வரி செலுத்துவோர் வசதி மையங்களை மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியம் ஏற்பாடுசெய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்குகள் வளாகத்தில் உள்ள புதிய சுங்கத் துறை இல்லத்தில் வரிசெலுத்துவோர் வசதி மையத்தை சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் உதய் பாஸ்கர் தொடங்கிவைத்தார்.
அதில் வரி செலுத்துவோருக்குத் தகவல் அளித்தல், வழிகாட்டுதலில் உதவி செய்வதற்காக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும், இவை சார்ந்த மற்றவர்களும் தங்களின் குறைதீர்ப்புக்கு இந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த மழை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு