சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கடுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
அதன்படி தமிழ்நாடு அரசு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில், பிப்.17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்22ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படஉள்ளது. இதனால் இன்று காலை முதலே மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை வாங்கி குவிக்க தொடங்கிவிட்டனர். பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதிவருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 1198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை!