சென்னை: தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப, தாழ்வழுத்த மின் நுகர்வோரின் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசிநாள் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதியாக இருந்தால், அதனை ஜூன் 15ஆம் தேதிவரை செலுத்தலாம் என கால அவகாசம் வழங்கப்பட்டது.
இன்றுடன் நிறைவு
மேலும், சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை கேட்பு செலுத்தவும், தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதேசமயம், ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்திவருகின்றனர். இந்நிலையில், அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
நீட்டிக்கப்படுமா?
கூடுதல் தளர்வுகள் அளித்த சில நாள்களிலேயே மின் கட்டணத்தை உடனே செலுத்துவது என்பது மிகவும் கடினம். எனவே கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, மே 31 வரை அளிக்கப்பட்டிருந்த அவகாசமானது, ஜூன் 15 வரை தமிழ்நாடு அரசால் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெறும் 1 மணி நேரத்தில் 73,250 கோடி ரூபாயை இழந்த அதானி: அந்த அந்தஸ்தும் பறிபோகிறது?