ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 1,329 பேருக்கு கரோனா தொற்று - சென்னை

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 329 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

TAMINADU COVID CASES ON OCTOBER 10
TAMINADU COVID CASES ON OCTOBER 10
author img

By

Published : Oct 11, 2021, 6:22 AM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் நேற்று (அக். 10) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 612 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், ஆயிரத்து 329 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாகக் கண்டறியப்பட்டது. இதுவரை நான்கு கோடியே 75 லட்சத்து 50 ஆயிரத்து 125 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 26 லட்சத்து 78 ஆயிரத்து 265 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 130 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

குறையும் கரோனா

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் ஆயிரத்து 436 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்துவருவோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 26 ஆயிரத்து 352 என உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் மூன்று பேர், அரசு மருத்துவமனையில் 12 பேர் என 15 நோயாளிகள் என சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 171 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 132 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 99 நபர்களுக்கும், ஈரோட்டில் 78 நபர்களுக்கும் எனத் தொடர்ந்து நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துவருகிறது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,51,611
  • கோயம்புத்தூர் - 2,44,003
  • செங்கல்பட்டு - 1,69,821
  • திருவள்ளூர் - 1,18,363
  • ஈரோடு - 1,02,737
  • சேலம் - 98,654
  • திருப்பூர் - 93,820
  • திருச்சி - 76,582
  • மதுரை - 74,847
  • காஞ்சிபுரம் - 74,278
  • தஞ்சாவூர் - 74,256
  • கடலூர் - 63,672
  • கன்னியாகுமரி - 62,006
  • தூத்துக்குடி - 56,020
  • திருவண்ணாமலை - 54,563
  • நாமக்கல் - 51,181
  • வேலூர் - 49,541
  • திருநெல்வேலி - 49,081
  • விருதுநகர் - 46,168
  • விழுப்புரம் - 45,615
  • தேனி - 43,501
  • ராணிப்பேட்டை - 43,205
  • கிருஷ்ணகிரி - 43,177
  • திருவாரூர் - 40,868
  • திண்டுக்கல் - 32,916
  • நீலகிரி - 33,181
  • கள்ளக்குறிச்சி - 31,105
  • புதுக்கோட்டை - 29,926
  • திருப்பத்தூர் - 29,132
  • தென்காசி - 27,305
  • தருமபுரி - 27,990
  • கரூர் - 23,752
  • மயிலாடுதுறை - 23,073
  • ராமநாதபுரம் - 20,443
  • நாகப்பட்டினம் - 20,705
  • சிவகங்கை - 19,964
  • அரியலூர் - 16,746
  • பெரம்பலூர் - 11,994
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,026
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.