தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.4), நாளை மறுநாள் (ஏப்.05) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 6, ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தேவகோட்டை (சிவகங்கை) 8 செ.மீ, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 6 செ.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 4செ.மீ, சிவலோகம் (கன்னியாகுமரி), கும்பகோணம் (தஞ்சாவூர்), சிற்றாறு (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ, போடிநாயக்கனூர் (தேனி), சோலையார் (கோவை) தலா 2செ.மீ, கன்னியாகுமரி, விருதுநகர் AWS (விருதுநகர்)) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஏப்.6-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக, ஏப்ரல் 6ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் ஏப்ரல் 7 ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!