ETV Bharat / city

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Apr 25, 2022, 5:09 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், 'இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தென்தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(ஏப்ரல்.26) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல்.27) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் வூட் பிரையர் எஸ்டேட் 4 செ.மீ, பந்தலூர் தாலுகா அலுவலகம் 3 செ.மீ, தக்கலை, கன்னிமார் தலா 2 செ.மீ, நாகர்கோவில், பூதபாண்டி, மயிலாடி, பேச்சிப்பாறை, புத்தன் அணை, ஹாரிசன் மலையாளம் லிமிடெட், செருமுள்ளி தலா 1செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

கடலுக்குச்செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது' என்றார்.

இதையும் படிங்க: இன்றைய தங்கம் விலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.