சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா வழிகாட்டுநெறிமுறைகளுடன் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.28ஆம் தேதி முதல் பிப்.4ஆம் தேதி வரை நடைபெறும். பிப். 5ஆம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். பிப்.7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.
வாக்குப்பதிவு பிப்.19ஆம் தேதி நடைபெறும். இறுதியாக வாக்கு எண்ணிக்கை பிப்.22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது. அதன்படி இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு