ETV Bharat / city

ரயில் மூலம் உணவு தானியங்கள்; முன்னணியில் தமிழ்நாடு!

author img

By

Published : Apr 30, 2020, 1:00 PM IST

சென்னை: ரயில் மூலம் உணவு தானியங்களைக் கொண்டு வருவதில், தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

train
train

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை சாலை மார்க்கமாகக் கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால், தானியங்கள் மற்றும் எளிதில் கெட்டுப் போகும் தன்மை கொண்ட உணவுப் பொருட்களை தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்வதில் ரயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டியது.

சரக்குப் போக்குவரத்துத் தடையின்றி நடைபெறவும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையிலும் இந்திய ரயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு பார்சல் ரயில்களை இயக்கி வருகிறது.

இதனால், சரக்கு ரயில் மூலம் தனியார் உணவு தானியங்களைக் கொண்டு செல்வது கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்து இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் 25 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரையான காலகட்டத்தில் இந்திய ரயில்வே 6.62 டன் உணவு தானியங்களை கொண்டு சென்றது. தற்போது இதே காலகட்டத்தில், 303 ரேக்குகள் மூலம் 7.72 டன் உணவு தானியங்கள் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

ரயில் மூலம் உணவு தானியங்கள்; முன்னணியில் தமிழ்நாடு!
ரயில் மூலம் உணவு தானியங்கள்; முன்னணியில் தமிழ்நாடு!

ரயில் மூலம் தனியார்கள் உணவு தானியங்களைக் கொண்டு செல்வதில் தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்திலும் பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்று சேரும் வகையில், சரக்குகளை ஏற்றி இறக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், விதைகள் உள்ளிட்டவையும் ரயில்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன.

நாட்டில் தேவை குறைவாக உள்ள பகுதிகளுக்கும் சரக்கு ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதாகவும், வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும், இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஏழைகளைக் காக்க 65 ஆயிரம் கோடி அவசியம் - ராகுலிடம் ராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.