ETV Bharat / city

பி.இ., பி.எட். படித்தாலும் ஆசிரியர் வேலை கிடையாது - தேர்வு வாரியம்

சென்னை: பி.இ., பி.எட். முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனுமதிப்பது குறித்து தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

teachers board
teachers board
author img

By

Published : Dec 10, 2019, 3:49 PM IST

Updated : Dec 10, 2019, 3:57 PM IST

தேசியக் கல்வி மற்றும் ஆசிரியர் நிறுவனத்தின் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் பி.இ. (பொறியியல்) படிப்பில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளை படிக்கும் மாணவர்கள் விரும்பினால் பி.எட். படிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில் பி.இ., பி.எட். படிக்கக் கூடிய மாணவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி அதன்பின் மற்றொரு தேர்வை எழுதி தேர்வு பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, உயர் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை ஒன்றில், பி.இ. (கணிதம்), பி.எட். படிப்பவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேரத் தகுதி பெறுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில், பி.இ., பி.எட். படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அனுமதிப்பது குறித்து தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் முறையாக தங்கள் துறை சார்பில் அரசாணை வெளியானால் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பி.இ., பி.எட் படித்தவர்களை அனுமதிக்கலாமா? எனத் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மற்றொரு போட்டித் தேர்வை எழுதி தேர்வு பெற வேண்டுமென ஏற்கனவே தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டபோதும், இதுவரை ஒரு தேர்வுகூட நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடம் நடத்தும் ஆசிரியர்

Intro:
பி.இ., பி.எட்., படித்தாலும் தற்போது ஆசிரியர் வேலை கிடையாதுBody:

பி.இ., பி.எட்., படித்தாலும் தற்போது ஆசிரியர் வேலை கிடையாது
சென்னை,

தேசிய கல்வி மற்றும் ஆசிரியர்நிறுவனத்தின் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் பி.இ., படிக்கும் மாணவர்கள், பி.எட்., படிப்பதற்கு தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கியது.
ஆனாலும் பி.இ,பிஎட் முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு அனுமதிப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில், கணினி அறிவியல் , தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளை படிக்கும் மாணவர்கள் விரும்பினால், பி.எட், படிப்பதற்கு தமிழக அரசு அனுமதி ஏற்கனவே வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் பி.இ., மற்றும் பி.எட்., படிக்க கூடிய மாணவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, அதன்பின் மற்றொரு தேர்வை எழுதி தேர்வு பெற்றால் மட்டுமே, ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்படும் பாடங்கள் மற்றொரு கல்லூரியின் பாடப்பிரிவிற்கு சமமானது என உயர்கல்வித்துறை அறிவிக்கும்.

இதற்கிடையே உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை ஒன்றில், பி.இ., (கணிதம்) மற்றும் பி.எட்., படிப்பவர்கள், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான ஆசிரியர் பணியில் சேர தகுதி பெறுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும்போது, பி.இ., மற்றும் பிஎட் படித்த மாணவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அனுமதிப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், முறையாக தங்கள் துறை சார்பில் அரசாணை வெளியானால் மட்டுமே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பி.இ.,பி்எட், படித்தவர்களை அனுமதிக்கலாமா? என தெரியவரும் என தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மற்றொரு போட்டித் தேர்வை எழுதி தேர்வு பெற வேண்டுமென ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்ட போதும், இதுவரை ஒரு தேர்வு கூட நடத்தப் படவில்லை, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Conclusion:
Last Updated : Dec 10, 2019, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.