சென்னை: தமிழ்நாட்டில் சார்பு உதவி ஆய்வாளர் பணியில் 444 காலி இடங்களுக்கு நேரடிப்போட்டிக்கான எழுத்துத்தேர்வு வருகிற ஜூன் 25 அன்று நடைபெறுகிறது.
இதற்கான தேர்வு நேரம் காலை 10 மணிமுதல் 12.30 மணி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணிவரை, முதல் முறை தமிழ் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது.
காவல் துறையில் பணியாற்றுபவர்கள் சார்பு உதவி ஆய்வாளருக்கு போட்டியிடுவதற்கான துறைசார் எழுத்துத்தேர்வு வரும் ஜூன் 26 அன்று, காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- அரசே பயிற்சி அளிக்கிறது!