ETV Bharat / city

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் - பொதுத்தேர்வு

சென்னை: ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மையங்கள் அந்தந்தப் பள்ளியிலேயே அமைக்கப்படும் எனவும், வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறையால் அச்சிட்டு வழங்கப்படும் என்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

students
students
author img

By

Published : Jan 22, 2020, 12:19 PM IST

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துப் பள்ளி ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் ஐந்து, எட்டாம் வகுப்பு நடத்தும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்பட வேண்டும்.
  • ஐந்து, எட்டாம் வகுப்புக்குரிய கேள்வித்தாள்கள் பாதுகாப்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
  • கட்டுக்காப்பு மையங்கள் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரின் பொறுப்பில், வினாத்தாள் அந்த மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு.
  • தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வுக் கட்டணமாக 100 ரூபாயும், எட்டாம் வகுப்பிற்கு தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயும் நிர்ணயம்.
  • இவர்களுக்கான கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுத் துறையால் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
  • ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு முன்னரும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு முன்னரும் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.

மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியல் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: '5,8ஆம் வகுப்பு மாணவர்களின் திறனைக் கண்டறியவே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது'

Intro:5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு
தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம்

Body:5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு
தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம்

சென்னை,

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவதற்கான மையங்கள் அந்தப் பள்ளியிலேயே அமைக்கப்படும் எனவும், வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறை அச்சிடப்பட்டு வழங்கப்படும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி அனுப்பியுள்ள கடிதத்தில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றி ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்படவேண்டும். இதேபோல் மாநில பாடத்திட்டத்தின் பின்பற்றி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு நடத்தும் அனைத்து வகை பள்ளிகளும் தேர்வு மையங்களாக அமைத்தல் வேண்டும்.

அனைத்து குரு வளங்களும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஆக அமைக்கப்படுதல் வேண்டும். அந்த மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாளை அனுப்ப வேண்டும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு உரிய கேள்வித்தாள்கள் பாதுகாப்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை கட்டுக்கோப்பு மையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் தேர்வு நடைபெறும் போது அனுப்பி வைக்க வேண்டும். படைப்பாளிகளையும் தேர்வு முடிந்தவுடன் வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் அன்றைய தினமே ஒப்படைக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனியார் சுயநிதி பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வு கட்டணமாக 100ம், எட்டாம் வகுப்பிற்கு தேர்வு கட்டணமாக 200ம் வசூல் செய்ய வேண்டும்.
இவர்களுக்கான கேள்வித்தாள்கள் அரசு தேர்வுத் துறையால் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
தேர்வு கட்டணம் தொகையினை அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை ஏப்ரல் 28 ந் தேதிக்கு முன்னரும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு முன்னரும் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் மதிப்பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டுமென அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.