சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று(ஜனவரி.29) தமிழ்நாடு வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
30.01.2022: தென் தமிழ்நாடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
31.01.2022 முதல் 01.02.2022, 02.02.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை வானிலை நிலவரம்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - நகை, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை