ETV Bharat / city

அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! - தென் தமிழ்நாடு மாவட்டங்களில் மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழ்நாடு மாவட்டங்களில் மழைப்பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை
அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை
author img

By

Published : Feb 21, 2022, 12:51 PM IST

சென்னை: கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று(பிப்.21) தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22.02.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி) ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.02.2022: தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.02.2022: தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.02.2022: தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மூடுபனி எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.