ETV Bharat / city

காவல் துறையில் காலியாகவுள்ள 444 பணியிடங்களுக்கான அறிவிப்பு! - காவல்துறையில் காலியாகவுள்ள 444 பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர்களுக்கான நேரடித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

காவல்துறையில் காலியாகவுள்ள 444 பணியிடங்களுக்கான அறிவிப்பு

author img

By

Published : Mar 3, 2022, 10:55 PM IST

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) (ஆண், பெண் மற்றும் திருநங்கை) பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிக்கை 08.03.2022-அன்று வெளியிடப்படவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 08.03.2022.

இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.04.2022.

இவ்வாரியம் முதன்முறையாகத் தமிழ் மொழித்தகுதித்தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்தவிருக்கிறது.

இவ்வாரியத்தில் 08.03.2022 முதல் 07.04.2022 வரை கட்டுப்பாட்டு அறையில் "உதவி மையம்" வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும். இதேபோன்று உதவி மையங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், அலுவலக பணி நேரத்தில் செயல்படும்.

இணையவழி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் / தெளிவுகளுக்கு இந்த "உதவி மையத்தின்" சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான தகுதி அளவுகோல், தேர்வு செயல்முறை, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி கேள்விகள் போன்ற கூடுதல் விவரங்கள் இவ்வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள்: 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899 மற்றும் 978903725 என்ற எண்களையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:'லஞ்சமாக ரூ.10 லட்சம் கொடுத்துப் பணியிட மாறுதல் பெறுபவர்கள் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தைப் போதிப்பார்கள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.