சென்னை: புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான தமிழ்நாடு மக்கள் மன்றம் அமைப்பு தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளது.
அதில், “புகையிலையற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதிலும் தொகையை கட்டிவிட்டு மீண்டும் மீண்டும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைப் பார்க்க முடிகிறது. எனவே தண்டனைத் தொகையை ஆயிரம், இரண்டாயிரம் என்பது போதுமானதாக இல்லை.
குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டால் புகையிலையிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற பணி மிகவும் மகத்தானதாகும்.
புகையிலைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் கீழ்கண்ட நடைமுறைகள் மிகவும் தேவையானதாகும்.
- புகையிலை வியாபாரிகள் எளிதாக தங்களது தண்டனைத் தொகையைக் கட்டிவிட்டு மீண்டும் மீண்டும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைப் பார்க்க முடிகிறது. எனவே தண்டனைத் தொகையை ஆயிரம், இரண்டாயிரம் என்பது போதுமானதாக இல்லை. குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டால் மட்டுமே புகையிலை வியாபாரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
- தண்டனைத் தொகையான ஆயிரம், இரண்டாயிரம் என்பதை மாற்றி புதிய புகையிலைத் தடுப்புச் சட்ட வரைவின்படி ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மாற்ற வேண்டும்.
- சிறார் உரிமைச் சட்டம் - புகையிலைப் பொருள்களை பதினெட்டு வயதிற்கும் அதற்கு குறைவானவர்களுக்கும் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடைசெய்கின்றது. அதன்படி, சிறார் நீதி சட்டத்தின்படி ஏழு ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது. இச்சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
- புகையிலைப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்வதற்கென்று தனியாக வியாபார உரிமை வழங்க வேண்டும். இந்த கடைகளில் எந்த பிறபொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது. இதன்மூலம் வியாபார உரிமையற்ற பிற கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடைசெய்ய முடியும். புகையிலைப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்யக்கூடிய கடைகளைக் கண்டறிந்து சட்டத்திற்குப் புறம்பான விற்பனையைத் தடைசெய்ய முடியும்.
தாங்கள் எடுக்க இருக்கக்கூடிய நடவடிக்கைகளுக்குப் புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான தமிழ்நாடு மக்கள் மன்றம் துணைநிற்கும்” என்று தெரிவித்துள்ளது.