ETV Bharat / city

'தேர்வில் முறைகேடு இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

author img

By

Published : Jan 29, 2020, 2:29 PM IST

சென்னை: பணத்தைக் கொடுத்தோ, அதிகார மையங்களின் மூலமாகவோ தேர்வில் தேர்ச்சிபெற்று விடலாம் என எதிர்காலத்தில் யாரும் நினைக்க முடியாத வகையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 99 தேர்வர்கள் குரூப்-4 தேர்வில் இடைத்தரகர்கள், தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் ஆகியோரின் உதவியுடன், அழியும் மையால் தேர்வெழுதி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா, அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "குரூப் 4 தேர்வு முறைகேட்டை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் செய்யப்பட்ட முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தனி அமைப்பு, அதில் அரசு தலையிட முடியாது. இருந்தபோதிலும் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில் தேர்வர்கள் அச்சமோ, கவலையோ அடையத்தேவையில்லை. பணத்தை கொடுத்தோ, அதிகார மையங்களின் மூலமாகவோ தேர்வில் தேர்ச்சி பெற்று விடலாம் என எதிர்காலத்தில் யாரும் நினைக்க முடியாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 1 சதவிகித முறைகேடுக்காக 99 சதவிகித தேர்வர்களை மீண்டும் தேர்வு எழுதச் செய்வது என்பது சரியாக இருக்காது.

தேர்வில் முறைகேடு இனி நடக்காத வகையில் நடவடிக்கை

ஒடிசா மாநில அரசு, அரசுத் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுத்துள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் தேர்வு மையம் அமைப்பது தொடர்பாகப் புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: தொடங்கியது விசாரணை

Intro:Body:டி.என்.பி.எஸ்.சி யில் ஏற்பட்டுள்ள் முறைகேடுகள் தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா, டி.என்.பி.எஸ் சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இது தவிர சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், 99 பேர் குரூப்-4 தேர்வில் இடைத்தரகர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் உதவியுடன் அழியும் மையால் தேர்வெழுதி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 99 பேரையும் தகுதிநீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை செயலகத்தில் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10 ஆயிரம் பணிகளுக்கான குரூப் 4 தேர்வுகளை தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் தேர்வு மையங்களில் 14 லட்சம் பேர் எழுதினார். இதில் நடைபெற்ற முறைகேடை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. இதனால் ஒட்டுமொத்த டிஎன்பிஎஸ்சி நம்பக தன்மை சந்தேகம் எழுந்துள்ளது.

இனி எதிர்வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் செய்யப்பட்ட முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட கறுப்பு ஆடுகள் எவ்வளவு பெரிய ஆளாக, யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் உரிய நடவடிக்கை அரசு எடுக்கும்.
இனி எதிர்வரும் காலங்களில் இதுபோன்று முறைகேடுகள் நடைபெறாது என்பதை அரசு உறுதி செய்யும், டிஎன்பிஎஸ்சி என்பது தனி அமைப்பு அதில் அரசு தலையிட முடியாது, இருந்த போதிலும் டிஎன்பிஎஸ்சி நம்பகதன்மையை உறுதி செய்ய வேண்டிய அரசின் கடமை. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அச்சமே, கவலையே அடைய தேவையில்லை.
எதிர்வருங்காலங்களில் பணத்தை கொடுத்தே, அதிகார மையங்களின் மூலம் தேர்வுகள் தேர்ச்சி பெற்று விடலாம் என எதிர்காலத்தில் இதுபோன்ற கனவுகள் காணாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்வர்கள் எதிர்வரும் காலங்களில் நம்பகதன்மையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதி அரசு உறுதியேற்கும். குரூப் 4 தேர்வில் 1 சதவீதம் மட்டும் தவறு நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 1 சதவீத முறைகேடுக்காக 99 சதவீதம் தேர்வர்களை மீண்டும் தேர்வு எழுத செய்வது என்பது சரியாக இருக்காது.
ஓடிசா மாநிலத்தில் அரசு தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுத்துள்ளது. அதே போன்ற தமிழகத்தில் தேர்வு மையம் அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகள் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.