ETV Bharat / city

கழிவு நீர் குழாய் சுத்தம் செய்ய ரோபோ; குளிரூட்டப்பட்ட கழிவறை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் - சட்டப்பேரவை

சென்னை: கழிவு நீர் குழாய் சுத்தம் செய்ய ரோபோ வாங்கப்படும் என்றும் மாநகராட்சிகளில் குளிரூட்டப்பட்ட கழிவறை அமைக்கப்படும் எனவும் சட்டபேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

velumani
velumani
author img

By

Published : Mar 16, 2020, 5:56 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டப் பகுதி மற்றும் அபிவிருத்தி சார்ந்த பகுதிகளுக்கு புதிய பாதாள சாக்கடைத் திட்டம் 238 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

2. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 40 குளங்கள் 20 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.

3. 34 நகரங்களுக்கு கழிவு நீர் குழாய்கள் மற்றும் ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்ய 34 ரோபோ இயந்திரம் 35 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

4. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர் வாரிசுகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

5. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ஒரு கழிவறை வீதம், அனைத்து மாநகராட்சிகளிலும் குளிரூட்டப்பட்ட கழிவறைகள் சோதனை முறையில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

6. சென்னை மாநகராட்சியில் பாதசாரிகளுக்கு வசதியாக 7 இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

7. பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளை உயிரி அகழ்வு முறையில் அகற்றி 200 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும்.

8. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்திற்கு, அதிநவீன புதுமை தொழில்நுட்ப ஆய்வகம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

9. வில்லிவாக்கத்தில் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், நீர் கருத்துப் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

10. 36 மாவட்டங்களில் ஒரு பேரூராட்சிக்கு ஒரு எரியூட்டும் கலன் வீதம், 36 எரியூட்டும் கலன்கள் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

11. 8 பேரூராட்சிகளில் நவீன எரிவாயு தகன மேடை 8.60 கோடியில் அமைக்கப்படும்.

12. 7 பேரூராட்சிகளில் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் 12. 75 கோடியில் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: ’அதிமுகவின் செல்வாக்கு என்றைக்கும் சரியாது' - முதலமைச்சர் பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.