ETV Bharat / city

கோயில் பூசாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் - இந்து சமய அறநிலையத்துறை - கோயில் பூசாரிகள்

சென்னை: கரோனா நிவாரணத் தொகையாக 20,415 பூசாரிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

temple
temple
author img

By

Published : May 6, 2020, 6:13 PM IST

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த, 3,627 கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு, ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 1000 உதவித்தொகை வழங்குவதற்காக, மூன்று கோடியே முப்பத்தாறு லட்சத்து இருபத்து ஆறாயிரம் ரூபாய் அரசால் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் பூசாரிகளின் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் பெற்றளித்தல் ஆகிய பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொண்டு விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்களுக்கு அளித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையில் இதுவரை 33,463 பூசாரிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள 20,415 பூசாரிகளுக்கு நிவாரணத் தொகையாக தலா 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதைக் கடந்தவர்கள், இறந்தவர்கள், வேறு பணிகளுக்குச் சென்றவர்கள் உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள 12,368 பூசாரிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க இயலவில்லை.

இப்பணியானது தொடர்ந்து நடைபெற்று மீதமிருக்கும் தகுதியுள்ள கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கும், நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவால் வாடும் பூ வியாபாரிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.