சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அமெரிக்காவில் கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக, உலகின் பல்வேறு மருத்துவ நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படுவதாகக் கூறினார்.
மேலும், மருந்து சேர்க்கை (drug combination) மூலம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நோய்க்கு இதுதான் மருந்து என்பதை உலகில் இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறிய அவர், மேலும் கரோனா தடுப்பு, விழிப்புணர்வு எனப் பன்முக நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதால், விரைவில் நல்ல செய்தி வரும் என்று உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: இரண்டு லட்சத்தை நெருங்கும் கோவிட்-19 பாதிப்பு