ETV Bharat / city

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு திரும்ப வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - வெளிமாநிலத் தொழிலாளர்கள்

சென்னை: ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

labours
labours
author img

By

Published : Jul 28, 2020, 3:22 PM IST

கரோனா பரவலையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வேலைவாய்ப்பற்று இருந்த லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாகவும், அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தொடர்வண்டிகள் மூலமாகவும் திரும்பினர். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாடு திரும்புவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அரசு வெளியிட்டுள்ளது. அதில், தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர விரும்பும் ஒவ்வொரு நிறுவனம் / மனிதவள முகவர், ஊழியர்களின் பெயர், குடியிருப்பு முகவரி, ஆதார் எண், கைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளித்து இ-பாஸ் மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஆராய்ந்து ஒப்புதல் அளிப்பார்.

மனிதவள நிறுவன செலவிலேயே தொழிலாளர்கள் அழைத்துவரப்பட வேண்டும். வாகனங்களில் அழைத்து வரும்போது, வண்டியில் ஏறும் முன் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு சோதிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்ததும், அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களின் செலவில், ஆர்டி-பிசிஆர் முறையில் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

சோதனையில் கரோனா பாசிட்டிவ் வரும் அனைத்து நபர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள். கரோனா நெகட்டிவ் வரும் அனைத்து நபர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அறிகுறிகள் இல்லாத மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த அனைவரையும், சோப்பு கொண்டு கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்ற சொல்லி பணித்தளங்களில் ஈடுபடுத்தலாம்.

மேலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை செய்யும் இடத்தில் தினமும் உடல் வெப்ப சோதனை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு பொருத்தமான மொழியைப் பயன்படுத்தி சுகாதாரக் கல்வியை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடம் நன்கு காற்றோட்டமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் “ என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவலர் காலிப் பணியிடங்கள்...! தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.