தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளால் களை கட்டும். கரோனா சூழலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு காளைகளும் வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனுமதியை ஆணையாக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி, வரும் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா விதிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![புதுக்கோட்டை, தேனியிலும் ஜல்லிக்கட்டு! - அரசாணை வெளியீடு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10202757_jallikattu.jpg)
மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடங்கி வைக்கவுள்ளனர். மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிபந்தனைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பேனர்களுக்கு தடை