சென்னை: ஆதரவற்ற பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றும் வகையில், 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை மீன்வளம், கால்நடைத்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியானது.
அதைச் செயல்படுத்தும் விதமாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு 75 கோடி 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு தலா 5 செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களின் 388 வட்டங்களிலிருந்து தலா 100 பயனாளிகள் தேர்ந்து எடுத்து வழங்கவும், பயனாளிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தேர்ந்து எடுத்து வழங்கத் தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறை இயக்குநர் கடிதம் வாயிலாக வட்டாட்சியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதில் பெண்கள் கிராம பொருளாதாரத்தை முன்னேற்றுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் முக்கிய கடமை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு