ETV Bharat / city

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தானியங்கள் வழங்க அரசு பரிசீலனை!

சென்னை: பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு தானியங்கள் வழங்குவது குறித்து பரிசீலித்துவருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

day meal
day meal
author img

By

Published : Jul 20, 2020, 4:14 PM IST

கரோனாவாலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிக்கூடம் திறக்காத நிலையில் ஏழை மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் சுதா, பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அம்மனுவில், ”ஏழை மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், 43 ஆயிரத்து 243 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் சத்துணவில் ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவது குறித்து பரிசீலித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சத்துணவு வழங்க இயலாததால், பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு தானியங்கள் வழங்குவது குறித்து, ஜூலை 27ஆம் தேதி விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.