இன்றைய கரோனா நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், தமிழ்நாட்டிர் ஐந்து ஆயிரத்து 490 பேருக்கும், பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய ஐந்து பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
எனவே கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் ஐந்து ஆயிரத்து 495 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 58 லட்சத்து மூன்று ஆயிரத்து 778 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் நான்கு லட்சத்து 97 ஆயிரத்து 66 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் 47 ஆயிரத்து 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆறு ஆயிரத்து 227 நபர்கள் குணமடைந்த இன்று வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 41 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 76 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவிற்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது.
ஆனால் அதே நேரம் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு
- சென்னை - 978
- செங்கல்பட்டு -267
- திருவள்ளூர் - 299
- மதுரை- 78
- காஞ்சிபுரம் - 133
- விருதுநகர் - 39
- தூத்துக்குடி - 83
- திருவண்ணாமலை - 144
- வேலூர் - 125
- திருநெல்வேலி - 108
- தேனி - 79
- ராணிப்பேட்டை -88
- கன்னியாகுமரி - 109
- கோயம்புத்தூர் - 428
- திருச்சிராப்பள்ளி- 79
- கள்ளக்குறிச்சி - 86
- விழுப்புரம் - 175
- சேலம் - 289
- ராமநாதபுரம் - 23
- கடலூர்- 253
- திண்டுக்கல் - 66
- தஞ்சாவூர் - 145
- சிவகங்கை - 50
- தென்காசி - 81
- புதுக்கோட்டை - 77
- திருவாரூர் - 147
- திருப்பத்தூர் - 41
- அரியலூர் - 14
- கிருஷ்ணகிரி -149
- திருப்பூர் -256
- தருமபுரி - 99
- நீலகிரி - 66
- ஈரோடு - 136
- நாகப்பட்டினம் -153
- நாமக்கல் -95
- கரூர் -43
- பெரம்பலூர் -17
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 2
- ரயில் மூலம் வந்தவர்கள் 0
- மொத்தம் 5,495