தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 713 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் இன்று தமிழ்நாட்டில் அதிகப்படியான எண்ணிக்கையாக 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
44,094 பேர் இன்று வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் 1,025 பேர் இன்று வரை உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 78 ஆயிரத்து 335 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,929 பேருக்கு இன்று சென்னையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று 217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 1,703ஆக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச அளவாக கரூரில் ஒருவருக்கும், தருமபுரியில் 2 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், அரியலூரில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், இன்று விருதுநகரில் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
இன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேர், திருவள்ளூரில் 146 பேர், வேலூரில் 148 பேர், திருவண்ணாமலையில் 110 பேர் என 100ஐ தாண்டிய தொற்று ஏற்பட்ட மாவட்டங்களாக இவை உள்ளன.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :
- சென்னை - 51,699
- செங்கல்பட்டு - 4,911
- திருவள்ளூர் - 3,420
- காஞ்சிபுரம் - 1,683
- திருவண்ணாமலை -1,624
- கடலூர் - 940
- மதுரை - 1,703
- திருநெல்வேலி - 723
- தூத்துக்குடி - 832
- விழுப்புரம் - 765
- ராணிப்பேட்டை - 719
- வேலூர் - 1,011
- அரியலூர் - 432
- கள்ளக்குறிச்சி - 552
- சேலம் - 604
- ராமநாதபுரம் - 648
- திண்டுக்கல் - 369
- திருச்சிராப்பள்ளி - 503
- தஞ்சாவூர் - 396
- கோயம்புத்தூர் - 428
- தென்காசி - 303
- தேனி - 513
- திருவாரூர் - 341
- நாகப்பட்டினம் - 295
- விருதுநகர் - 313
- கன்னியாகுமரி - 304
- பெரம்பலூர் - 161
- திருப்பூர் - 147
- கரூர் - 136
- சிவகங்கை - 157
- நாமக்கல் - 95
- புதுக்கோட்டை - 131
- ஈரோடு - 112
- திருப்பத்தூர் - 115
- கிருஷ்ணகிரி - 115
- தருமபுரி - 61
- நீலகிரி - 66
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 358
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 267
தொடர்வண்டி மூலம் வந்தவர்கள்: 403