ETV Bharat / city

’நள்ளிரவு தடியடிக்கு காவல்துறையும், பாஜகவுமே பொறுப்பு’ - கே.எஸ். அழகிரி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்றிரவு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட களேபரங்களுக்கு காவல்துறையும், பாஜகவுமே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Feb 15, 2020, 9:05 PM IST

alagiri
alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சென்னையில் நேற்று இரவு நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுக்கிறோமே தவிர வன்முறையைத் தூண்டும் நோக்கம் அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அவர்களின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும்போது வன்முறைக்குக் காரணம் அரசாக இருக்க வேண்டும் அல்லது, பாஜகவாக இருக்க வேண்டும். காவல்துறைதான் இவ்விவகாரத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளது. அரசு போராடியவர்களை பாதுகாத்து இருக்க வேண்டும். இதில் அரசாங்கம், காவல்துறை செய்துள்ள தவற்றை இனி வரும் காலங்களிலாவது இப்படி நடக்காமல் திருத்திக் கொள்ள வேண்டும்“ எனக் கூறினார்.

’நள்ளிரவு தடியடிக்கு காவல்துறையும், பாஜகவுமே பொறுப்பு’ - கே.எஸ்.அழகிரி

இதையும் படிங்க: இஸ்லாமிய அமைப்பினர் மீது தடியடி - மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

Intro:சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டிBody:சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து உள்ளனர். எங்களுடைய போராட்டம் மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர வன்முறையை தூண்ட வேண்டும் என்ற நோக்கம் அல்ல என்றனர்.

அவர்களின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும் போது வன்முறைக்கு காரணம் அரசாங்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பா.ஜ.க.வாக இருக்க வேண்டும். இவர்கள் தான் மறைவில் இருந்து தாக்கியதாக சொல்கின்றனர். அதன் அடிப்படையில் அடிதடி நடந்து உள்ளது.

போலீஸ் வன்முறையை தூண்டி உள்ளது. இந்த போராட்டம் ஆரம்பித்த காலத்தில் அகிம்சை வழியில் யாருக்கும் எதிராக இல்லாமல் ஒரு கொள்கை முடிவை மற்றொரு கொள்கை முடிவால் எதிர் கொள்கின்ற நடவடிக்கையாக உள்ளது.

டிசம்பர் 23ந் தேதி சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி பேரணியில் கூட ஒரு அசம்பாவித சம்பவம் கூட நடக்கவில்லை. தமிழகத்தில் பல நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறேன் எங்கும் அசம்பாவிதம் கிடையாது. இது பற்றி யோசிக்க வேண்டி உள்ளது.

அரசு இதை வன்முறையாக காட்டாமல் பாதுகாப்பாக பாதுகாத்து இருக்க வேண்டும். போராட்டம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதில் அரசாங்கம், போலீஸ் சிறு தவறு செய்து உள்ளனர். இதை திருத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.